பஞ்சம் போக்கும் படிக்காசுநாதர்
கோயில்களும் வரலாறுகளும் : அறிந்ததும் அறியாததும் I படிக்காசுநாதர் I Padikasunathar
பக்தனின் பசியை நீக்க படிக்காசு வழங்கிய சொர்ணபுரீஸ்வரர், தன்னை நம்பி வரும் அன்பர்களின் வறுமையைப் போக்கி வளமையைக் கூட்டுவார் என்பது இங்கு நம்பிக்கை.
தமிழகத்தின் தஞ்சை மாவட்டத்தில் அழகாபுத்தூர் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது படிகாசு நாதர் கோவில். இவருக்கு மற்றொரு பெயர் ஸ்வர்ணபுரீஸ்வரர் என்பதாகும். இங்கிருக்கும் அம்பிகைக்கு செளந்தர்ய நாயகி என்று பெயர்.
கும்பகோணம் நாச்சியார்கோயில் பாதையில் திருநறையூருக்கு முன் உள்ள தலம். கும்பகோணத்திலிருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது.
தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலங்களுள் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. 63 நாயன்மார்களில் ஒருவரான புகழ்துணை நாயனாருடன் தொடர்புடையது இத்தலம். அழகாபுத்தூர் தான் அவருடைய ஜனன ஸ்தலம் ஆகும்.
இக்கோவிலுக்கு சோழர்கள் பெரும் பங்கு ஆற்றியுள்ளனர் என்பதற்கான குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. இறுதியாக இக்கோவிலை புணரமைத்து விரிவுப்படுத்தியது தஞ்சை நாயக்கர்கள் ஆவர்.
மற்ற கோவில்களில் சூரிய சந்திரன் கிழக்கு நோக்கி அமைந்திருக்குமெனில், இங்கே இருவரும் நேரெதிர் பார்க்குமாறு அருள் பாலிக்கின்றனர். இங்கிருக்கும் மூலவர் முன் ஒன்பது குழிகள் இருக்கின்றன இதில் ஒன்பது கிரகமும் வாயு வடிவில் இருப்பதாக நம்பிக்கை. முன்னோர்களுக்கான பூஜைகளை இங்கே விளக்கேற்றி பக்தர்கள் வழிபடுகின்றனர்.
படிக்காசு பூஜை
மற்றொரு அதிசயமாக, இங்கே வழிபடும் மக்கள் படிக்காசு பூஜை செய்கின்றனர். அதாவது இரு காசுகளை மூலவரின் படியில் வைத்து வணங்கி அதில் ஒரு காசினை விட்டு சென்று மற்றொரு காசை மட்டும் வீட்டிற்கு எடுத்து செல்கின்றனர். இதன் மூலம் வீட்டின் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை.
இத்தலம் குறித்து சொல்லப்படும் தல வரலாறு யாதெனில், புகழ்த்துணை நாயனார் தினமும் இறைவனுக்கு அரசலாற்றில் இருந்து நீர் எடுத்து வந்து அபிஷேகம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். எந்த இடர் வரினும் இந்த சேவையை அவர் இறைவனுக்கு நிறுத்துவதாக இல்லை. ஒரு முறை ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. ஊர் மக்கள் உணவின்றி தவித்தனர்.


சங்கு சக்கரம் ஏந்திய முருகப்பெருமானின் அபூர்வத் தோற்றம்.
திருமாலே சங்கு சக்கரம் போன்றவற்றைக் கையில் கொண்டிருப்பார். ஆனால் இக்கோயிலில் முருகனின் கையில் இருப்பது ஒரு சிறப்பம்சமாகும்.
ஒருசமயம் அசுரர்களின் தொல்லை அதிகரிக்கவே, தேவர்கள் தங்களை காக்கும்படி சிவனிடம் வேண்டினர். சிவன், அசுரர்களை அழிக்க முருகனை அனுப்பினார். அப்போது சிவனும், தேவர்களும் அவருக்கு பல ஆயுதங்களை கொடுத்தனர். திருமால் முருகனுக்கு தனது சங்கு, சக்கரத்தை கொடுத்தார்.
ஆயுதங்களுடன் சென்ற முருகன், அசுரர்களை சம்ஹாரம் செய்தார். இந்த நிகழ்வின் அடிப்படையில் இங்குள்ள முருகன் கேடயம், வில், அம்பு, சாட்டை, கத்தி, சூலாயுதம், வஜ்ரம் மற்றும் சங்கு, சக்கரத்துடன் காட்சி தருகிறார். சங்கு, சக்கரமே இவரது பிரதான ஆயுதமாக இருக்கிறது. இந்திர மயில் மீது அமர்ந்த கோலத்தில் இருக்கும் இவரை, கல்யாணசுந்தர சண்முக சுப்பிரமணியர் என்று அழைக்கிறார்கள். இவரது திருவாசி ஓம் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. வள்ளி தெய்வானை உடனிருக்கின்றனர். அருகில் மகாலட்சுமி சன்னதி இருக்கிறது. திருமாலின் ஆயுதங்களுடன் முருகனையும், அருகில் மகாலட்சுமியையும் ஒரே சமயத்தில் தரிசிப்பது அபூர்வம்.
திருமண, புத்திர தோஷம் உடையவர்கள் இத்தல முருகனுக்கு பால் பாயாசம் நைவேத்யம் படைத்து, பூஜை செய்து வழிபடுகிறார்கள். இதனால் இந்த தோஷங்கள் நீங்குவதாக ஐதீகம்.
மூலவர் சன்னதியின் கோஷ்டத்தில் பிரம்மா, லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி ஆகியோர் உள்ளனர். அருகே சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. மூலவர் சன்னதிக்கு வலது புறம் அம்மன் சன்னதி உள்ளது. திருச்சுற்றில் விசாலாட்சி, விநாயகர், காசி விசுவநாதர், சுப்ரமணியர், புகழ்த்துணை நாயனார், லட்சுமி, மாணிக்கவாசகர், ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், பரவை நாச்சியார் ஆகியோர் உள்ளனர். திருச்சுற்றின் பின்புறத்தில் சொர்ண பைரவர், கால பைரவர், நவக்கிரகங்கள் ஆகியோர் உள்ளனர்.





