செவ்வாய் தோஷம் நீங்க - புகழிமலை முருகன் கோயில் | Pugalimalai Murugan Temple

கோயில்களும் வரலாறுகளும் | Temples & Historie இந்தக் கோயிலின் தொடர்ந்து 12 வாரம் செவ்வாய்க்கிழமைகளில் செவ்வரளிப் பூ மற்றும் செவ்வாழைப் பழம் படைத்து வழிபட்டால் திருமண தடை நீக்கும் என்பது நம்பிக்கை.

நர்மதாவேல்முருகன்.

கரூரிலிருந்து 16 கி.மீ. தொலைவிலுள்ள புகழூரிலிருந்து 4 கி.மீ. தொலைவில் 345 படிக்கட்டுகள் கொண்ட மலை மீது அமைந்துள்ளது புகழிமலை முருகன் கோயில்.

கரூர் மாவட்டத்தின் ஒரு ஓரத்தில் காவிரி ஆற்றங்கரையில் தென்பகுதியில் உள்ள ஆறு கிராமங்களுக்குப் புகழிமலை சொந்தமானது. அதனால் இந்த மலை, ‘ஆறுநாட்டார் மலை’ என்றும் அழைக்கப்படுகிறது. சங்க காலத்துக்குப் பின்பு சமணர்கள் இப்பகுதியில் வாழ்ந்துவந்தனர். சமணர்களுக்குப் புகலிடம் தந்த காரணத்தால் இந்த மலை புகலி மலை என்று அழைக்கப்பட்டு, புகழி மலை என மாறிப் பின்னர் புகழூர் என பெயர் பெற்றிருக்கலாம் என நம்பப்படுகிறது.

மேலும் 8-ஆம் நூற்றாண்டில் அரியணையில் அமர்ந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னனின் மெய்க்கீர்த்தியில் இவ்வூர் "புகழியூர்" என அழைக்கப்பட்டதாகவும் இங்குள்ள கல்வெட்டுக் குறிப்புகள் உரைக்கின்றன. ஓர் ஆள் படுப்பதற்கான அளவில் படுக்கை போன்றே செதுக்கப்பட்டிருக்கும் 35-க்கும் மேற்பட்ட இடங்கள் இம்மலையின் குகைகளில் ஆங்காங்கே காணப்படுகின்றன. சூடாமணிப் பொந்து என்று அழைக்கப்பட்ட அவற்றைச் சமணர்கள் படுக்கைகளாகப் பயன்படுத்தியதாகவும் கல்வெட்டுக் குறிப்புகள் குறிப்பிடுகின்றன.

இம்மலை மைசூர் எல்லையாக இருந்த காலகட்டத்தில்தான் இக்கோயில் கட்டப்பட்ட தாகவும், அதன் அடிப்படையிலேயே இங்கு மைசூர் கோயில்களின் கட்டட பாணியில் கோபுரம் அமைந்துள்ளதாகவும் கூறுகின்றனர். மற்ற திருக்கோயில்களில் உள்ளதைப் போன்று இல்லாமல், இந்தக் கோயிலின் மயில் வாகனத்தின் தலை இடப்புறமாகவும், தோகை வலப்புறமாகவும் திகழ்கிறது. இத்தகைய அமைப்பு சூரசம்ஹாரத்துக்கு முற்பட்ட முருகனின் திருக்கோலத்தை குறிக்குமாம். இதிலிருந்து இந்தக் கோயிலின் புராதனத்தை அறியமுடிகிறது.

அந்த மலையில் முருகன் கோவில் உள்ளபோதும் கூட, மேற்புறத்திலுள்ள சமணர் படுக்கைகளை காண வரலாற்று ஆர்வலர்கள் பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து வந்து குறிப்புகளை சேகரித்து செல்கின்றனர்.

இந்தக் கோயிலின் தொடர்ந்து 12 வாரம் செவ்வாய்க்கிழமைகளில் செவ்வரளிப் பூ மற்றும் செவ்வாழைப் பழம் படைத்து வழிபட்டால் திருமண தடை நீக்கும் என்பது நம்பிக்கை.

நிகழ்ச்சியைதொகுத்துவழங்குபவர்: நர்மதாவேல்முருகன்.